தாயின் உடலருகே
துடித்து கதறியது பிள்ளை
தாய்ப் பாலுக்காக....
மரக்கரி விற்ப்பது போல்
மறத்தமிழன் கறி விற்றது
மறக்க முடியுமா ?
கொழும்பு வீதியிலே .....
மலையக மக்கள் - எங்கள்
மறு பெயரோ வந்தேறிகள்,
சில சமயம்
சிங்கள அடுப்பில்
தந்தூரிகள்.....
கொடுமைகளை கண்ட
எங்கள் உள்ளமோ கசப்பில்
கொதித்தெழுந்து கேட்டல்
எங்கள் உடல்கள் கசாப்பில்......

It's Heart touching lines Sir..
ReplyDelete