Monday, August 16, 2010

ஈழம் (தமிழ் கொடி இதழில் எனது படைப்புகள்)

முல்லை பெரியாறில்
தண்ணீருக்காக 
குரல் கொடுப்பவர்கள் எங்கள் 
முல்லை தீவு பெரியவரின் 
கண்ணீருக்ககவும்
குரல் கொடுங்களேன்.... 

சிலையை வணங்கினாலும் 
சிலுவையை வணங்கினாலும் 
வாரியார் வழி சென்றாலும் 
பெரியார் வழி நின்றாலும் 
தேசிய கொடி தாண்டி
தொப்புள் கொடி 
உறவுகளுக்கு குரல் 
கொடுப்போம்....தேவை எனில் 
துப்பாக்கி குழல் எடுப்போம்...
ஈழத்தை மீட்டெடுப்போம் ....

ஏழு கொடி தமிழர்களும் 
ஒன்று கூடி எழுந்தால் 
சிங்களவன் 
செல்வதெந்த கொடி ...

நீங்கள் சிலிர்த்து எழ  வேண்டும்
உலக தமிழர்கள் சிரித்தது வழ வேண்டும்....

சுமா... தமிழ் கொடி இதழில் எனது படைப்புகள்

No comments:

Post a Comment