மரக்கரி விற்பது போல்
மாறத் தமிழன்
கறி விற்றது
மறக்க முடியுமா
கொழும்பு நகர வீதியிலே..
மலையக மக்கள்
எங்கள் மறு பெயரோ
வந்தேறிகள்
சில சமயம்
சிங்கள அடுப்பில்
தந்தூரிகள்..
கொடுமைகளை கண்ட
எங்கள் உள்ளமோ கசப்பில்
கொதிதெளுந்து கேட்டாள்
எங்கள் உடல்கள்
கசாப்பில்...
இன்று முகாம்களிலே
வதை படுகிறோம்
சிதை படுகிறோம்
எங்கள் விதைகள் வீதியிலும்
சதைகள் சாக்கடையிலும்
வீசி எறியப்படுகின்றன.....
வெளியே பயிரை
மேயுமோர் ஆட்சி...
அந்த வேலிக்கு இந்த
ஓனான் சாட்சி...
ஈழத்தில் தான் இந்த காட்சி..
சரித்திரங்கள் பல கண்ட
தமிழர்கள் இன்று
தரித்திரங்களாக முகாம்களில்....
உலகிற்க்கு
சூத்திரங்கள் பல தந்தவர்கள்
கையில் பாத்திரங்களோடும்
நெஞ்சில் ஆத்திரங்களோடும்
விடியலுக்காய்
காத்திருக்கிறோம் பகலிலே...

