கோலங்கள் மாறும் ...
காட்சிகள் மாறும் - ஈழத்தில்
ஒரு நாள்
ஆட்சியும் மாறும் - இந்த
தீவினிற் கோர்
தீர்வு வரும்
சோர்வு வேண்டாம் தோழர்களே!!
நம் வாழ்வு மலர்ந்திடும் !
நாளைய பொழுது
ஈழத்தில்
புலர்ந்திடும் !!
காக்கை கூடினால்
பொறித் திட்ட
குயிலின் குஞ்சுகள் அல்ல
தமிழர்கள் கருவறையிலேயே வீரம் தரித்திட்ட
தமிழின் பிஞ்சுகள் நாங்கள் .
எங்கள்
கல்லறையேனும்
ஈழத்தில் அமைத்திடுவோம் -தனி
ஈழத்தில் அமைத்திடுவோம்
தண்ணீரில் மலர்ந்ததல்ல
ஈழம்
கண்ணீராலும்
செந்நீராலும் வளர்ந்தது - எனவே
பன்னீரை விட
வாசனை அதிகம் - என கந்தல் உடையும்
தலை விரி கூந்தலுமாய்
காந்தல் தேசமே எங்கள்
காதல் தேசமென
காத்திருக்கிறோம்....






