Saturday, November 27, 2010

மரக்கரி விற்பது போல்
மாறத் தமிழன்
கறி விற்றது
மறக்க முடியுமா
கொழும்பு நகர வீதியிலே..

மலையக மக்கள்
எங்கள் மறு பெயரோ
வந்தேறிகள்
சில சமயம்
சிங்கள அடுப்பில்
தந்தூரிகள்..

கொடுமைகளை கண்ட
எங்கள் உள்ளமோ கசப்பில்
கொதிதெளுந்து கேட்டாள்
எங்கள் உடல்கள்
கசாப்பில்...

இன்று முகாம்களிலே
வதை படுகிறோம்
சிதை படுகிறோம்
எங்கள் விதைகள் வீதியிலும்
சதைகள் சாக்கடையிலும்
வீசி எறியப்படுகின்றன.....

வெளியே பயிரை
மேயுமோர் ஆட்சி...
அந்த வேலிக்கு இந்த
ஓனான் சாட்சி...
ஈழத்தில் தான் இந்த காட்சி..

சரித்திரங்கள் பல கண்ட
தமிழர்கள் இன்று
தரித்திரங்களாக முகாம்களில்....

உலகிற்க்கு
சூத்திரங்கள் பல தந்தவர்கள்
கையில் பாத்திரங்களோடும்
நெஞ்சில் ஆத்திரங்களோடும்
விடியலுக்காய்
காத்திருக்கிறோம் பகலிலே...

Saturday, November 13, 2010

தினமலர் நாளிதழில் வெளியான செய்தி...

Tuesday, August 24, 2010

காந்தல் தேசம்

காலங்கள் மாறும் 
கோலங்கள் மாறும் ...
காட்சிகள் மாறும் - ஈழத்தில் 
ஒரு நாள் 
ஆட்சியும் மாறும் - இந்த 
தீவினிற் கோர்
 தீர்வு வரும்
சோர்வு வேண்டாம் தோழர்களே!!
நம் வாழ்வு மலர்ந்திடும் !
நாளைய பொழுது  
ஈழத்தில்
புலர்ந்திடும் !!

காக்கை கூடினால் 
பொறித் திட்ட 
குயிலின் குஞ்சுகள் அல்ல 
தமிழர்கள் கருவறையிலேயே வீரம் தரித்திட்ட  
தமிழின் பிஞ்சுகள் நாங்கள் .
எங்கள் 
கல்லறையேனும் 
ஈழத்தில் அமைத்திடுவோம் -தனி 
ஈழத்தில் அமைத்திடுவோம்

தண்ணீரில் மலர்ந்ததல்ல
ஈழம் 
கண்ணீராலும் 
செந்நீராலும் வளர்ந்தது - எனவே 
பன்னீரை  விட 
வாசனை அதிகம் - என கந்தல் உடையும் 
தலை விரி கூந்தலுமாய் 
காந்தல் தேசமே எங்கள் 
காதல் தேசமென 
காத்திருக்கிறோம்....

Friday, August 20, 2010

அப்துல் கலாம்


மாளிகை சுகத்தில்
மூழ்கி விடாமல் 
நீர் மூழ்கியில்
மூழ்கி வந்தவர் 

சுகமாய் மாளிகையில்
இல்லாமல் 
சுகோய் விமானத்தில் 
பறந்தவர் 

விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு மத்தியில் 
அக்கினி குஞ்சாய் இருந்து 
அக்கினி சிறகுகள் கண்ட
ஒரு குடியரசுத்தலைவர்...



சுமா

தாவணி கனவுகள்

இது தாவணி அணியும்  
பெண்கள் காணும் 
கனவு அல்ல......
பெண்கள் 
தாவணி அணிய 
நான் காணும் கனவு... 

சுமா சுப்ரமணியம் 

Tuesday, August 17, 2010

அவளின் ஒரு நிமிட சாதனை.

யாரும் பார்க்காத போது
பெருவிரலை உயர்த்தி 
சுண்டு விரலை தாழ்த்தி 
தலையை  அசைத்து 
தொலை  பேசியில் 
தொடர்புகொள்
என்று  சைகையில்
சொன்ன போதுதான் 
புரிந்தது அவளின் 
ஒரு நிமிட சாதனை......

சுமா...

புகைப்பட ஆல்பம்

நானும் 
சிறு சேமிப்பு 
கணக்கு துவங்கினேன் 
உன் முதல் புகைப்படம் 
கிடைத்தவுடன்....


சுமா ..

Monday, August 16, 2010

MY PROGRAMME ON KALAINGAR T.V DIL DIL MANATHIL MIRROR WRITING IN 8 LANGUAGES

MY PROGRAMME IN KALAINGAR T.V DIL DIL MANATHIL MIRROR WRITING IN 8 LANGUAGES

தமிழ் கொடி இதழில் எனது படைப்பு



வெடித்து சிதறிய 
தாயின் உடலருகே 
துடித்து கதறியது பிள்ளை 
தாய்ப் பாலுக்காக....

மரக்கரி விற்ப்பது போல் 
மறத்தமிழன்  கறி விற்றது 
மறக்க முடியுமா ?
கொழும்பு வீதியிலே .....

மலையக மக்கள் - எங்கள் 
மறு பெயரோ வந்தேறிகள்,
சில சமயம் 
சிங்கள அடுப்பில்
தந்தூரிகள்.....

கொடுமைகளை கண்ட 
எங்கள் உள்ளமோ கசப்பில் 
கொதித்தெழுந்து  கேட்டல் 
எங்கள் உடல்கள் கசாப்பில்...... 

ஈழம் (தமிழ் கொடி இதழில் எனது படைப்புகள்)

கட்டப்பட்ட கண்களோடும் - விலங்கு
பூட்டப்பட்ட கைகளோடும் 
ராணுவ வீரனின் 
கடமை க்கு 
கண்ணியமாய்
கட்டுப்பட்டோம்....
சாவதற்க்கு தயாராய்
அம்மணமாக ......

ஈழம் (தமிழ் கொடி இதழில் எனது படைப்புகள்)

முல்லை பெரியாறில்
தண்ணீருக்காக 
குரல் கொடுப்பவர்கள் எங்கள் 
முல்லை தீவு பெரியவரின் 
கண்ணீருக்ககவும்
குரல் கொடுங்களேன்.... 

சிலையை வணங்கினாலும் 
சிலுவையை வணங்கினாலும் 
வாரியார் வழி சென்றாலும் 
பெரியார் வழி நின்றாலும் 
தேசிய கொடி தாண்டி
தொப்புள் கொடி 
உறவுகளுக்கு குரல் 
கொடுப்போம்....தேவை எனில் 
துப்பாக்கி குழல் எடுப்போம்...
ஈழத்தை மீட்டெடுப்போம் ....

ஏழு கொடி தமிழர்களும் 
ஒன்று கூடி எழுந்தால் 
சிங்களவன் 
செல்வதெந்த கொடி ...

நீங்கள் சிலிர்த்து எழ  வேண்டும்
உலக தமிழர்கள் சிரித்தது வழ வேண்டும்....

சுமா... தமிழ் கொடி இதழில் எனது படைப்புகள்

தமிழன் (தமிழ்க்கொடி இதழில் எனது படைப்பு)

புத்த நெறி யிங்கு 
ரத்த வெறி கொண்டு
தாக்கிட்ட போதும்
யுத்த நெறி காத்திட்டோம் 
எங்கள் மொத்த குறியும்
ஈழம் என்பதனால் -
தமிழீழம்  என்பதனால்...


கொட்டி கொடுக்க
ஆளுண்டு! 
தட்டி கேட்க
ஆளில்லை! என்பதனால்
வெட்டி சாய்க்க
தமிழன் என்ன
பட்டி ஆடுகளா?
 சுமா...